விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம். அப்டேட்டுடன் புகைபடத்தை வெளியிட்ட மாஸ்டர் குழு.

0
3242
VijayVijaysethupathi

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் இவர் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தன் அன்பு முத்தத்தை கொடுத்து உள்ளார் விஜய் சேதுபதி. பொதுவாகவே கூகுள் புகைப்படத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அதில் அனைவருக்கும் முத்தம் கொடுத்து இருப்பார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் முத்தம் கொடுத்திருப்பார். இதனை தொடர்ந்து அடுத்து வருபவர்களும் அதை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். இந்த பட்டியலில் தற்போது விஜய்யும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் கலை இயக்குனர் சதீஷ் குமார் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்கள் படக்குழுவினர். அப்போது சதீஷ்குமாருக்கு அன்பாக முத்தம் ஒன்றை கொடுத்து உள்ளார் விஜய் சேதுபதி. இதை கவனித்த விஜய் தனக்கும் முத்தம் கொடுக்குமாறு கிண்டலடித்து உள்ளார். உடனே விஜய்யை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் மழை பொழிந்து உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்வின் போது ஒட்டு மொத்த படக்குழுவினரும் இதை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்து வந்துள்ளனர். சமீபத்தில் விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்த செல்பி பெருமளவில் வைரலானது. அதைப் போலவே விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு கொடுத்த முத்தம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது XB நிறுவனம்.மேலும், இந்த படத்தின் விஜய் சேதுபதியின் காட்சிகள் நிறைவடைந்து விட்டதாகவும் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், அடுத்த மாதம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement