தனது ரசிகரின் குழந்தைக்கு விஜய் சேதுபதி என்ன பெயர் வைத்தார் தெரியுமா ? (ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தின் பெயராச்சே)

0
3307
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

விஜய் சேதுபதி பல பிரபலங்களுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. மாஸ்டர் பட செட்டில் விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கும் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து கையில் முத்தமிட்டார் விஜய் சேதுபதி.

இப்படி யாரை பார்த்தாலும் பாசத்தை பொழிந்து தள்ளும் விஜய் சேதுபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கையில் குழந்தையை கொஞ்சி முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. தருமபுரி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின் ஆண் குழந்தைக்கு விஜய் சேதுபதி பெயர் வைத்துள்ளார். அதுவும் என்ன பெயர் தெரியுமா ? துருவன். இதை கேட்டதும் ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படம் ஞாபகம் வருதா.

-விளம்பரம்-
Advertisement