அந்த படத்தில நான் வில்லனா நடிக்கிறேன்னு சொன்னேன் – தனுஷுடன் மிஸ் ஆன படம் குறித்து விஜய் சேதுபதி.

0
1321
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் பல்வேரு படங்களில் வில்லனாகவும் அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் ரஜினி மற்றும் விஜய் இருவர் படத்திலும் வில்லனாக நடித்து அசத்திவிட்டார்.

வீடியோவில் 9 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் முதல் படப்பிடிப்பு துவங்கியது. இதை தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து இருந்தார் விஜய் சேதுபதி.

இதையும் பாருங்க : அஜித்தின் வலிமை லுக் பற்றி ட்வீட் போட்டு வம்பில் சிக்கிய சாந்தனு – பின்னர் புலம்பி அவர் போட்டுள்ள பதிவை பாருங்க.

- Advertisement -

அப்போது பேட்டியாளர், விஜய்யுடன் நடிச்சாச்சு ரஜினியுடன் நடிச்சாச்சு எப்போது அஜித்துடன் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, முதலில் இந்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று கூறிய விஜய் சேதுபதி, பின்னர் எனக்கு எல்லாருடனும் நடிக்க ஆசை தான். மீண்டும் விஜய்யுடன் நடிக்க கூப்பிட்டாலும் நடிப்பேன். அதே போல மாறி படத்திலேயே நான் வில்லனா நடிக்க கேட்டேன் என்று கூறி ஷாக் கொடுத்தார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான மாறி திரைப்படத்தின் முதல் பாகத்தில் பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் நடித்து இருந்தார். அதே போல இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடித்து இருந்தார். ஆனால், இரண்டு வில்லன்களும் படத்திற்கு சுத்தமாக செட் ஆகவில்லை. ஒரு வேலை விஜய் சேதுபதி நடித்து இருந்தால் படம் ஹிட் ஆகி இருக்குமோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement