சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் போஸ்டரில் அஜித்தின் தோற்றத்தை பற்றி ட்வீட் செய்து சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகர் சாந்தனு. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்களும் வெளியானது. அதில், ரேஸ் பைக்கின் மீது அஜித் அமர்ந்திருப்பது போன்று இருந்ததால் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது.
மோஷன் போஸ்டரை விட இந்த போஸ்டர் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.இப்படி ஒரு நிலையில் நடிகர் சாந்தனு வலிமை படத்தின் இந்த போஸ்டர் பற்றி ட்வீட் ஒன்றை செய்து இருந்தார். அதில், தல இந்தப் புகைப்படத்தில் சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார்” என்று பதிவிட்டார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் சாந்தனுவை திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இவர் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதால் தான்.
இதையும் பாருங்க : வனிதா சகோதரி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா ? இவங்களும் அதே குடும்ப ஜாடைல தான் இருக்காரு பாருங்களேன்
இப்படி ஒரு நிலையில் இந்த பதிவிற்கு கீழ் ட்வீட் ஒன்றை போட்டுள்ள சாந்தனு. ட்விட்டரில் எது பேசினாலும் தவறாகிறது. நல்ல விதமாகச் சொன்னாலும் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர். நான் சொன்னதைத் திரித்துப் பேசுகிறார்கள். எனவே, எனது முந்தைய ட்வீட்டில் சொன்னதை மீண்டும் வார்த்தைகள் மாற்றிச் சொன்னேன். ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசித்து யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
சமூக ஊடகம் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. எப்படியோ, எனக்குத் தலயின் தோற்றம் பிடித்திருந்தது. அதனால் ட்வீட் செய்தேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது சாந்தனு முருங்கக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன் தயாரித்து உள்ளார்.