ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா விஜய் சேதுபதி ?

0
262
jawan
- Advertisement -

ஜவான் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ் மட்டும் தெலுங்கு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்திய புஷ்பா 1 படத்தை தொடர்ந்து
புஸ்பா 2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் புஸ்பா 2 படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது புஸ்பா 2 பாகத்திற்கான பணிகள் நடைபெறுகிறது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், அவருக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படம் 2023ஆம் ஆண்டும் 10 மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு ‘புஷ்பா2’ல் பகத் பாசில் & விஜய் சேதுபதிக்கு முக்கிய இடமுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவின் இல்லை தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடிக்கும் படம்:

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இவர்களுடன் நடித்து வித்தியாசமான கதை களத்துடன் திரைக்கு வந்த படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் இந்த படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். விஜய் சேதுபதியின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது விக்ரம் படம்.

விக்ரமின் வெற்றி :-

விக்ரம் படத்தில் கமலஹாசன், பகத் பாசிலுக்கு சவால் கொடுக்கும் அளவிற்கு சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பார். அவருடைய ஆரம்ப காட்சி முதல், இறுதிக் காட்சிவரை பயங்கரமான வில்லத்தனமும், நக்கலான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாடி லாங்குவேஜில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் விக்ரம் படம் பார்த்த மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிறமொழி ரசிகர்களும் விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டி வந்தனர் இப்போது விஜய் சேதுபதி ஜவான் படத்தின் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஜவான் படத்தில் விஜய் கேமாயோ ரோல் :-

இந்நிலையில் இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கும் ஜாவான் படத்தில் ஒரு கேமியோ ரோல் கொடுப்பதாக செய்திகள் இணையத்தில் கசிந்து கொண்டிருந்தனர். சமீபத்தில் கூட நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய் இருவரும் சந்தித்துக் கொண்டது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் பலரும் இந்த புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம் இது இது போலியான புகைப்படம் என்றும் அதிகாரப்பூர்வமான அறிக்கை வரும் வரை காத்திருங்கள் என்றும் நெட்டிசன்கள் பலர் அறிவுறுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் விஜய் கண்டிப்பாக தாவான் படத்தில் சேமியா ரோல் கொடுப்பார் உறுதியாகிள்ளது.

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் :-

இப்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் சென்னையில் வைத்து படம் ஆக்கபடுகிறது. இந்நிலையில் ஜாவான் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ஆம், ஜாவான் படத்தில் வில்லனாக நடிக்கும் வஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த படங்களிலே அதிகபட்சம் சம்பளம் வாங்கியது ஜவான் படத்தில் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்பட்டு வருகிறது. மேலும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை இன்னும் சில வருடங்களில் விஜய், அஜித் போன்று விஜய் சேதுபதியும் சம்பளம் வாங்கினாலும் வாங்குவார்.

Advertisement