வடிவேல் பாலாஜி மரணம் : நேரில் சென்று கண்கலக்கிய விஜய் சேதுபதி – வீடியோ இதோ.

0
4980
vadivelbalaji
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு பாலாஜி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 10) உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால், மருத்துவமனைக்கு அனைத்து பணத்தையும் நாங்கள் கட்டினோம் ஆனால், அங்கே சிகிச்சை சரியில்லாததால் தான் நாங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றோம் என்று பாலாஜியின் உறவினர்கள் கூறனார்கள். பாலாஜியின் உடல் சேத்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement