வயது வித்யாசம் பார்க்காமல் மேடையில் சரவணன் செய்த செயல் – அட்வைஸ் செய்த விஜய் சேதுபதி

0
248
- Advertisement -

‘சார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் சினிமா உலகில் நுழைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவர் படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம்தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் நடிப்பில் இருந்து சில வருடங்கள் தள்ளி இருந்தார். தற்போது மீண்டும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சார் படம்:

அந்த வகையில் விமல் அவர்கள் இயக்குனர் போஸ் வெங்கட் உருவாகி இருக்கும் ‘சார்’ படத்தில் நடித்திருக்கிறார். படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். விமல் உடன் இணைந்து சாயா கண்ணன், சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ரமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கிறார்கள். . மேலும், சித்து குமார் இப்படத்திற்கு அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழா:

கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்லா வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், வெற்றிமாறன், போஸ் வெங்கட், விமல், விஜய் சேதுபதி, சரவணன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய விஜய் சேதுபதி, சார் படத்தை பார்த்து விட்டேன். மிகவும் நல்ல படம். மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்த படத்தில் உள்ள விஷயங்கள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி பேசியது:

கூத்து பட்டறையில் இருக்கும் போது இருந்தே நான் விமலின் ரசிகன். விமலுக்கு இது முக்கியமான படமாக இருக்கும். மேலும், இயக்குனர் போஸ் வெங்கட் தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் பயணித்து வருகிறார். அவருடைய அரசியல் எதிர்காலத்தையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதோடு, படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, நடிகர் சரவணனை பார்த்து நீங்கள் ரொம்ப பிரமாதமா நடித்து இருக்கிங்க என்று விஜய் சேதுபதி சொன்னார்.

சரவணன் செயலால் சங்கடமான சேதுபதி:

அதற்கு உடனே, நடிகர் சரவணன் விஜய் சேதுபதியின் காலை தொட்டு கும்பிட்டார். அதற்கு விஜய் சேதுபதி, ‘சார் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க’ என்றார். அப்போது விஜய் சேதுபதி இடமிருந்து மைக்கை சட்டென்று வாங்கிய சரவணன், இதுவரைக்கும் வெளியே வராத விஷயம் நான் இப்போது சொல்கிறேன். விஜய் சேதுபதிக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க போகிறேன். அதனால் தான் அவர் என்னை பெரிய மனுஷத்தனமாக நடந்து கொள்ள சொல்கிறார் என்று விஜய் சேதுபதியின் கன்னத்தை தொட்டு முத்தமிட்டிருந்தார். சரவணன் செயலால் தர்ம சங்கடமான விஜய் சேதுபதியின் இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement