தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஸ். இந்த படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி சிறையிலிருந்து வெளிவந்து மலேசியாவிற்கு போகிறார். அங்கு யோகி பாபு மூலமாக தன் பெயர் மாற்றி சமையல் வேலைக்கு போகிறார். இதற்கு இடையில் தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் கதாநாயகி ருக்மணி வசந்த்தை பார்த்ததுமே விஜய் சேதுபதிக்கு காதல் வந்தது. பின் தன்னுடைய காதலை ருக்மணியிடம் விஜய் சேதுபதி சொல்லிவிட்டார். ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்கிறார்கள்.
பின் ருக்மணிக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்காக ரவுடி அவினாஷ் இடம் விஜய் சேதுபதி கடன் கேட்க சொல்கிறார். அங்கு சூதாட்டம் மூலமாக விஜய் சேதுபதி அதிக பணம் சம்பாதிக்கிறார். இதை பார்த்த அவினாஷ், விஜய் சேதுபதியை ஏமாற்றி பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டு அவரை கடனாளி ஆக்குகிறார். கடைசியில் அவினாஷ் இடமிருந்து விஜய் சேதுபதி பாஸ்போர்ட்டை மீட்டாரா? ருக்மணிக்கு பணம் கொடுத்தாரா? ருக்மணிக்கு அவ்வளவு பணம் தேவைப்பட காரணம் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். ஒரு சில இடங்களில் அவருடைய முக பாவனைகளில் பெரிதாக வித்தியாசம் காட்டாமல் அப்படியே இருந்திருக்கிறார். இருந்தாலுமே படத்திற்கு ஒரு பெரிய பலமே விஜய் சேதுபதியின் நடிப்பு என்று சொல்லலாம். இவரை அடுத்து கதாநாயகியாக வரும் ருக்மணி துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார்.
கோபம், சந்தோசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இன்னொரு பெரிய பலமே யோகி பாபு நடிப்புதான். இவர் செய்யும் காமெடிகள் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து ரவுடி அவினாஷ், போலீஸ் பப்லு, திவ்யா பிள்ளை உட்பட நடிகர்கள் பலருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பணம் தேவை என்பதை மையமாக வைத்து இயக்குனர் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
முதல் பாதி பொறுமையாக செல்கிறது. ஆனால், இரண்டாம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். ஆனால், சில காட்சிகள் சூது கவ்வும் படத்தின் சாயல்களை காண்பித்து இருக்கிறது. தேவையில்லாத நிறைய காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கிறார். அதோடு படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கிறது. இருந்தாலும் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. பாடல்கள் சுமார் தான். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் ஏஸ் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=cl-ltA1BeQs
நிறை:
நடிகர்கள் நடிப்பு ஓகே
பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே
யோகி பாபு காமெடி
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

குறை:
முதல் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது
கதைக்களத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
நிறைய லாஜிக் மிறல்கள்
தேவையில்லாத காட்சிகள்
மொத்தத்தில் ஏஸ் - உச்சத்தை அடையவில்லை






