தமிழக கிரிக்கெட் வீரரின் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதியா ?

0
916
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது.

-விளம்பரம்-
Image result for Vijay Sethupathi Cricket
விஜய் சங்கருடன் விஜய் சேதுபதி

- Advertisement -

விஜய் சேதுபதி அவர்கள் தற்போது ‘க/பெ ரணசிங்கம்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட பல படங்களில் இறுதிகட்ட பணியில் மும்முரமாக நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. வைரலாகும் புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தினைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1972-ம் ஆண்டு கண்டியில் பிறந்த தமிழர் தான் முத்தையா முரளிதரன். இவர் இலங்கை அணிக்காக 1992 முதல் 2011-ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் முரளிதரன்.

Image result for muttiah muralitharan

அதனடிப்படையில் இந்த படத்திற்கு “800” என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் இலங்கை அணி எழுச்சி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முத்தையா முரளிதரன் தான். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு ஒரு படமாக தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலர் இதை வரவேற்றும்,சிலர் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர். மேலும், இந்த படம் தொடங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி தேதிகளை ஒதுக்கி உள்ளாதாகவும், தற்போதைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் கிரிக்கெட் வீரரின் படத்தில் நடிக்க உள்ளாதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பிற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தெரிவிக்கப்படும். அதோடு படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் நடிகர்கள் எல்லோரும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட உள்ளார். கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் 800 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதால் இந்த படத்திற்கு “800” என்ற தலைப்பு வைக்க இருப்பதாக தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளார்களாம். இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி அவர்கள் இயக்குகிறார். இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த படம் குறித்த அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும்.

Advertisement