என் வாயில் சிறுநீர் கழித்தார்கள்..!நடிகர் விஜய் சேதுபதி கூறிய உருக்கமான பிளாஷ் பேக்..!

0
1183
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதியும் ஒருவர். திரைப்படங்களில் ஒரு ஓரமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் பல்வேறு திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தனுஷ்ஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மஹான் அல்ல போன்ற படங்களில் சிறு கத்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வர்ணம் ‘ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

- Advertisement -

இதையும் படியுங்கள் : வேறு ஒரு நடிகருக்காக வசனம் மற்றும் திரைக்கதை அமைக்கபோகும் விஜய் சேதுபதி

வாரணம் என்ற படத்தில் தான் முதல்முறையாக எனக்கொரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது. 

நான் அதில் நடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைதட்டினர். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என்னால் நடிக்க முடியும் என்று நான் உணர்ந்தது அன்றுதான். 

-விளம்பரம்-
Advertisement