வேறு ஒரு நடிகருக்காக வசனம் மற்றும் திரைக்கதை அமைக்கபோகும் விஜய் சேதுபதி ..!

0
688
Vijaysethuapthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதியும் ஒருவர். திரைப்படங்களில் ஒரு ஓரமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

Director-sanjeev

- Advertisement -

இதுநாள் வரை ஒரு திறமைமிக்க நடிகராக இருந்து வந்த நடிகர் தற்போது வசனகர்த்தாவாகவும் அவதாரமெடுத்துள்ளார். ஆம், நடிகர் விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதுவதுடன் திரைக்கதையும் அமைக்கவிருக்கிறார்.

தற்போது வெண்ணிலா கபடிக்குழு 2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து நடிகர் விக்ராந்த்தின் சகோதரரான இயக்குநர் சஞ்ஜீவ் இயக்கும் பெயரிடபடாத ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Vijaysethupathi

இந்த படத்திற்கு தான் நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதவுள்ளார்.இதுகுறித்து இயக்குனர் சஞ்ஜீவ் தெரிவித்த போது நான் இந்த படத்தின் கதையை சுருக்கமாக நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறினேன். இந்த கதையை கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்துபோகி இந்த படத்தில் விக்ராந்த் நல்ல தேர்வாக இருப்பார் என்று பரிந்துரையும் செய்தார்.

மேலும், இந்த படத்தில் தானே வசனத்தை எழுத்துவதாகவும் கூறினார்.அதே போல இந்த படத்தின் கதை கலந்துரையாடலின் போதும் கதையை மெருகேற்ற பல யோசனைகளை கூறினார். அவர் ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வசனம் எழுதியுள்ளார் ஆனால், வேறு ஒரு ஹீரோவின் படத்திற்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல் முறை என்றார் இயக்குனர் சஞ்சீவ்.

Advertisement