தோனி மகளை தொடர்ந்து விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் – கைது செய்ய கோரி கோரிக்கை. எவ்வளவு கேவளமா பேசி இருக்கார் பாருங்க.

0
3073
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை தொடர்ந்தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த ஆட்டங்களில் தோல்வி அடைந்து கொண்டு வரும் சென்னை அணி பிலே ஆப் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் சென்னை அணியை வழிநடத்தி வரும் தோனியை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

-விளம்பரம்-

சென்னை அணியின் இந்த தோல்விக்கு கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் ஒரு சிலர் தோனியின் ஆட்டம் தான் காரணம் என்று தோனியை கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தோனியின் ஐந்து வயது மகள் ஜீவாவிற்கு மிரட்டல் விடுக்கும் தோணியில் கமெண்ட் செய்து இருந்தார். இதனால் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. எம் எஸ் தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அநாகரிகமான முறையில் பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியில் முந்த்ராவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் போலீசாரால் கைது செய்தனர்.

- Advertisement -

அவர்தான் அந்த கருத்துக்களை வெளியிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரவ் சிங் தெரிவித்து இருந்தார். தற்போது தோனி மகளுக்கு நடந்தது போலவே மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே போல பாரதி ராஜா, அகத்தியன், சேரன், சீனு ராமசாமி என்று பல்வேறு இயக்குனர் கூட விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முத்தையா முரளிதரன் கூட விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கைக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “நன்றி.. வணக்கம்” எனக் கூறி இருந்தார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘அந்த படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது’ என்று கூறி இருந்தார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக என்னை சமூக வலைதளத்தில் ஒரு மர்ம நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சின்மயி பதிவிட்டுள்ளதாவது ”கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல. இந்த சிஸ்டமில் இருக்கும் யாராவது இதை மாற்றிவீர்களா ? பொது இடத்தில் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று ஒரு நபர் செல்வது குற்றம் என்று கூறியுள்ளார்.

Advertisement