மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் சேதுபதியின் காட்சி. வைரலாகும் வீடியோ.

0
11572
thalapthy64

அட்லி இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகரம் கைதி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் மேலும், விஜய் சேதுபதி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது தான் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவர்களை தவிர மாஸ்டர் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். சமீபத்தில் கர்நாடகாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. மேலும், இந்த படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

- Advertisement -

தற்போது இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் லுக் என்னவென்று பர்ஸ்ட் போஸ்டர் மூலம் ரசிகர்கள் ஓரளவிற்கு யூகித்துவிட்டார்கள். ஆனால், இந்த படத்தில் விஜய் சேதுபதியின் லுக் மட்டும் ரொம்ப ரகசியமாக வைக்கபட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதியின் ஒரு காட்சி படமாக்கப் பட்ட போது அதனை யாரோ சிலர் வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம் பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement