தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தனக்கு என்று ஒரு தனியான பாதையை தமிழ் சினிமாவில் அமைத்துக் கொண்டார் என்பது படங்கள் என்றாலே அது ஹிட் என்று எழுதப்படாத விதியாக உள்ளது.
நடிகர் என்பதை தாண்டி நடிகர் விஜய் சேதுபதியை ஒரு மனிதனாகவும் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும் அதற்கு முக்கிய காரணமே இவரது இமையும் சமூக அக்கறையுடன் இவள் செய்யும் சிறு செயலிகளும் தான் இந்த கோயில் போதும் சரி தூத்துக்குடி தாக்குதலின் போதும் சரி இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். மேலும் தற்போது ‘நம்ம ஊரு ஹீரோ ‘ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிபங்கேற்று பலரது நல்ல அபிப்பிராயத்தையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவில் உள்ள ஆர்த்தி, ஆதித்யா ஆகிய இரண்டு புலிகளை தத்தெடுத்துள்ளார். இந்த புலிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவு மற்றும் உணவுக்கான செலவை ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. இதற்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வண்டலூர் ஜூ நிர்வாகம் அங்குள்ள விலங்குகளை காப்பாற்றும் விதமாக ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதில் வண்டலூரிலுள்ள விலங்குகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் அந்த விலங்கிற்காகும் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் அவனும் என்ற வெள்ளை புலி ஒன்றை தத்து எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.