தன்னை பற்றி வந்த மீம்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.
ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் கடந்த சில மாதங்களுக்கு ஒரு வாரத்தில் மட்டும் விஜய்சேதுபதி நடிப்பில் 4 படங்கள் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியது. அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து உள்ளதாக சொல்லப்பட்டது.
அடுத்தடுத்து வெளியான படங்கள் :
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாபம். இந்த படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்களில் வெளிவந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கிற்கு முதலில் வெளிவந்த படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லணும்.
பின் செப்டம்பர் 10-ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் நேரடியாக முதல் முறை ஒளிபரப்பு செய்தார்கள். அதேநாளில் நெட்பிளிக்ஸ் வலைத்தளத்திலும் இந்த திரைப்படம் வெளியானது. மேலும், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் சோனி லீவ் வலைதலத்தில் வெளியாகியது.
வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் :
இந்த மூன்று திரைப்படங்களும் ஒரே வாரத்தில் வெளியாகி இருந்தது. அதோடு செப்டம்பர் 17ஆம் தேதி தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி இருந்த அனபெல் சேதுபதி படம் ஹாட்ஸ்டார் வலைதலத்தில் வெளியாகி இருந்தது. இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாவது அடுத்து ரசிகர்களும், நெட்டிசன்களும் சோசியல் மீடியாவில் பயங்கர மீம்ஸ்களைப் போட்டு கிண்டலடித்து வந்தனர்.
மீம்கள் குறித்து விஜய் சேதுபதி :
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தன்னை பற்றி வந்த மீம்கள் குறித்து பேசுகையில் ‘ என்னுடைய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானதையடுத்து பல்வேறு மீம்கள் வெளியானதுதான் இதைப் பேசுபொருளாக்கியது. அந்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் சிறிது அதிருப்தி இருந்தாலும் அது வேண்டுமென்றே தேவையில்லாத நாடகம் ஆக்கப்பட்டது. அதைச் செய்தது யார் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்கள் என்னைப் பற்றிப் பேசவில்லை. என் கலையை, வேலையைப் பற்றிதான் பேசியுள்ளார்கள். அவர்களுக்கு என் வேலை மூலமாகத்தான் நான் பதில் சொல்வேன் என்று கூறியுள்ளார்.
‘