மக்கள் செல்வனுக்கு 41வது பிறந்தநாள்.! ‘சயிரா’ படக்குழு அளித்த மற்றொரு சர்ப்ரைஸ்.!

0
626

தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையை சுடாமல் லாபம் பார்த்து கொடுக்கின்றன. 

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சயிரா நரசிம்ம ரெட்டி ‘ பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இந்த படத்தில் தெலுங்கின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தமிழ் திரையுலகின் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்

- Advertisement -

மேலும், அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இந்த படத்தினை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் ‘கோனிடிலா புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதியின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement