விஜயை சீண்டி வரும் கருணாகரன்..!மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..!

0
593
Vijay-sethupathy

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.

பின்னர் சிறிது நாட்கள் அமைதியாக இருந்த கருணாகரன்  சர்கார் படத்தில் வரும் Corporate criminals என்று போட்டதோடு கிண்டலான எமோஜி ஒன்றையும் போட்டுள்ளார். இதனால் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்தார். 

இந்நிலையில் நடிகர் விஜய் பேசிய அந்த வசனத்தை தனியார் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்ருதிஹாசன் நடிகர் விஜய் சேதுபதியிடம் உங்களைப் பற்றிய ஒரு கிசு கிசு உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ற கேள்வியை முன் வைக்கிறார்.

அதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி ‘ஐ ஏம் எ கார்ப்பரேட் கிரிமினல் ’ என்று விஜய் பாணியில் பதிலளித்துள்ளார். இந்த வசனத்தை பேசித்தான் நடிகர் கருணாகரன் விஜய் ரசிகர்களிடம் வம்பில் மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.