ஜோதிகாவிற்கு ஆதரவு இல்லை சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த விஜய் சேதுபதி.

0
2764
vijaysethu
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா அஜித் விக்ரம் சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சிலும் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பி வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. தற்போது ஜோதிகாவின் கருத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார் என்ற அடுத்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

அந்த விழாவில் பேசிய ஜோதிகா, தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால்கூட சொல்ல முடியாது. எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம்.

- Advertisement -

மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்க’ எனத் தனியார் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. மேலும், நடிகை ஜோதிகா இந்து கோவில் குறித்து ஏன் அப்படி பேசினார் என்று அவரின் பேச்சு தற்போது பல விவாதங்களைக் கிளபியிருக்கிறது. மேலும், ஜோதிகாவை விமர்சித்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்தனர். அவ்வளவு ஏன் பிரபல நடிகர் எஸ் வி சேகர், திரௌபதி இய்குனார் மோகன் போன்றவர்கள் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரபல நடிகரான விஜய் சேத்துபதி ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வைரலானது. அதில், ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது, இதுகுறித்த விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இது போலியானது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) சூர்யா, ஜோதிகா கருத்திற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜோதிகா பேசிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிருந்தார். அந்த அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சூப்பர் என்று பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Advertisement