விஜய் கூட இப்படி செய்யல. விஜய் 64 படப்பிடிப்பில் ரசிகனுக்காக விஜய் சேதுபதி செய்த செயல்.

0
2115
vijay-64
- Advertisement -

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வந்த 63வது படம் “பிகில்”. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படத்தை கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதாவை வைத்து படம் எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதையும் பாருங்க : ஹீரோ கதை திருட்டு விவகாரம், உஷாரான எஸ் கே. இனி எல்லாம் இந்த 10 பேர் எடுக்கும் முடிவு தான்.

- Advertisement -

கர்நாடகாவில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய் சேதுபதி அவர்கள் தனது ரசிகர்களுக்காக மிகப் பெரிய சைஸ் கொடுத்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறியவர் விஜய் சேதுபதி. இவர் எப்போதும் மக்களோடு மக்களாக தான் இருப்பார். தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. “தளபதி 64” படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்தகட்டமாக டெல்லியிலும் நடந்தது. மூன்றாவது கட்டமாக மீண்டும் சென்னையில் நடந்து முடிந்து தற்போது இறுதி கட்ட சூட்டிங் கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கின்றது.

கர்நாடகாவில் நடக்கும் “தளபதி 64” படத்தின் சூட்டிங்கில் தான் விஜய் சேதுபதி முதன் முதலாக கலந்து கொள்கிறார். அதற்காக விஜய் சேதுபதி அவர்கள் கர்நாடகா சென்று உள்ளார். மக்கள் செல்வன் சூட்டிங்க்கு கிளம்பிகிறார் என்று தகவல் அறிந்த ரசிகர்கள் அனைவரும் ஹோட்டல் முன்பு குவியத் தொடங்கி சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதிலும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவருக்கு இன்று பிறந்த நாளாம். மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கையால் தனது பிறந்தநாள் கேக் வெட்டி ஊட்டி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் அந்த பிறந்தநாள் நபர். சமீபத்தில் விஜய்யை சந்திக்க சில மாற்று திறனாளி மாணவர்கள் பல மணி நேரம் நின்றும் விஜய் அவர்களை சந்திக்கவில்லை என்று ஆசிரியர் ஒருவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
Image

இதை அறிந்த விஜய் சேதுபதி அவர்கள் கேக் உடன் வந்த தன் ரசிகரை அழைத்து பிறந்தநாள் கேக் வெட்டி ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஷூட்டிங் செல்வதற்காக பிஸியாக இருந்த தருணத்திலும் ரசிகர்கள் கேட்டவுடன் எந்த ஒரு முகம் சுளிக்காமல் விஜய் சேதுபதி செய்த காரியத்தை விடியாவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்கள். தற்போது இது வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்து விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் பேன்ஸ் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement