விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இவர்கள் தான்..!ஆனால் அஜித் என்றால்..!

0
719

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களாக விளங்கி வருகின்றனர். என்னதான் இவர்கள் ரசிகர்கள் சிலர் இன்னமும் தல தளபதி சண்டையை போட்டு வந்தாலும், விஜய் மற்றும் அஜித் இருவரும் சிறந்த புரிதலுடனும், நட்புடன் தான் பழகி வருகின்றனர். இவர்களை போலவே இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் நல்ல நட்புடன் தான் பழகி வருகின்றனர்.

Ajith

அதே போல விஜயின் மகள் ஷா ஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்துவருக்கின்றனர். கடந்த சில மாதத்திற்க்கு முன்னர் ஷாஷாவை சந்தித்த அஜித், அவரிடம் எப்போதும் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிடாதே ,அது உனது உடல் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் மிகவும் நல்லது என்று அன்பான அறிவுரைகளை வழங்கியிருந்தார் என்ற சில தகவல்களும் வெளியாகின.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருக்கிறார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றே, அவர் தற்போது “ஜுன்க்ஷன்” என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலித்துள்ளார்.அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்டுள்ளார்.

Ajith biriyani

அதற்கு பதிலளித்த சஞ்சய், எனக்கு அப்பா (விஜய்), விஜய்சேதுபதி மற்றும் அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அஜித் அங்கள் செய்யும் பிரியாணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தல என்றால் கெத்து தான் என்று தெரிவித்துள்ளார். சஞ்சயின் இந்த பதில் அஜித் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.