விஜய் மகன் பெயரில் மோசடி – விஜய் தரப்பில் இருந்து வந்த விளக்கம். ரசிகர்களே உஷார்.

0
562
sanjay
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றிய பிற தகவல்:

இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய படமாக வாரிசு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் அவர் மென் பொறியாளராக (Software and Application Developer ) நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

சொல்லப்போனால், இதுவரை விஜய் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அவ்வபோது, இந்தப் படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் கசிந்து கொண்டுதான் இருக்கிறது.

விஜய் மகன் வைத்த கோரிக்கை:

இதனால் படக்குழுவினர் கூடுதல் பாதுகாப்போடு படப்பிடிப்பை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் சில தினங்களுக்கு முன்பு விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா தொடர்பான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து விஜயின் மகன் சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, வாரிசு படத்தில் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் என்று கூறியிருக்கிறார்.

சஞ்சயின் சோசியல் மீடியா:

இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து விஜய் தரப்பில் இருந்து கூறி இருப்பது, இது சஞ்சயின் உண்மையான ட்விட்டர் பக்கம் இல்லை. விஜய்யின் மகன் சஞ்சய் ட்விட்டர் உட்பட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் கணக்கு வைக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் விஜய்யின் மகன் பெயரில் வெளிவந்துள்ள டீவ்ட் போலி கணக்கு என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement