தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் நடித்த படங்களின் வசனங்கள், பாடல்களை கேட்டு கேரளாவில் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிகிச்சை செய்து வருகிறார்கள். மேலும்,இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எப்போதுமே நம்முடைய வாழ்க்கையில் சினிமா திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்களின் வசனங்களை நிஜ வாழ்க்கையில் பேசுவதும்,அதே மாதிரி செய்வதும் வழக்கமான ஒன்று. அது மட்டுமில்லாமல் நடிகர்களின் உற்சாகம் கொடுக்கும் பாடல்களும், வசனங்களும் நமக்கு தன்னம்பிக்கை அளிப்பது உண்டு. அதனால் நிறைய பேர் அந்த வசனங்களையும்,பாடல்களையும் மொபைல் மூலமாகவோ,எழுதி வைத்தோ அதை செய்வது உண்டு. ஆனால், இதையெல்லாம் தாண்டி தற்போது விஜய் அவர்கள் நடித்த படங்களின் வசனங்களையும், பாடல்களையும் வைத்து மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதுவும் கேரளாவில் என தெரியவந்தது.
அப்படி கேரளாவில் பிறவியிலேயே நடக்கவும், பேசவும் முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் தளபதி விஜய் அவர்கள் நடித்த படங்களின் வசனங்களையும், பாடல்களையும் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கேரள மாநிலத்தில் இடுக்கியை சேர்ந்த சிறுவன் செபாஸ்டின். இவன் பிறவியிலேயே நடக்கவும், பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆகும். அந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே இந்நிலையில் சிறுவனை அவரது பெற்றோர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த இடுக்கில் உள்ள ‘பஞ்சகர்மா’ சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மேலும், அங்கு சிறுவனை அனுமதித்து சிகிச்சையும் பெற்று வந்தார்கள்.
இதையும் பாருங்க : அட, பிக் பாஸ் ஐஸ்வர்யாவா இது. முதன் முறையாக தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருக்கார்.
அப்போது ஒரு நாள் செல்போன் ஒன்றிலிருந்து விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் படமான ‘கத்தி’ படத்தில் இருந்து ‘செல்பி புள்ள’ பாடலை ரிங்டோனாக வைத்து இருந்தார்கள். அந்த ரிங்டோனை அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கேட்டவுடன் அவருடைய உடம்பில் அசைவுகள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்தவுடன் மருத்துவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அதன் விளைவாகத் தான் விஜய் நடித்த படங்களின் வசனங்களையும், பாடல்களையும் சொல்லும் போதும், ஒளிபரப்பும் போது சிறுவனின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவர்கள் விஜய் நடித்த படங்களின் வசனங்களை காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார்கள். அதன்படி நடிகர் விஜய்யோட படத்தில் கூறிய பஞ்ச் வசனங்கள் மற்றும் நடன காட்சிகள் எல்லாம் அந்த சிறுவனுக்கு காட்டி சிகிச்சை தொடங்கினர்.
தற்போது அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் மெதுவாக நடப்பதாகவும், பேச முயற்சிப்பதாகவும் மருத்துவமனையில் கூறப்பட்டு வருகிறது. மேலும், நடிகர் விஜய் படங்களின் மூலமாக மாற்றுத்திறனாளி சிறுவன் செபாஸ்டின் குணமடைய ஆரம்பித்ததை பார்த்து அவருடைய பெற்றோர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஆனந்தத்தில் பூரித்துப் போய் விட்டார்கள். மேலும், இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அதோடு அந்த பையன் சீக்கிரம் குணமடைய எங்களுடைய மனமார வேண்டுதல் என்றும் கூறிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு மருத்துவரும் குணப்படுத்த முடியாத விஷயத்தை விஜய்யின் படம் வசனங்கள், பாடல்களைக் கேட்டு சிறுவன் குணம் அடைகிறான் என்றால் விஜய்க்கு இப்படி ஒரு தீவிர ரசிகரா!! என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.