ஆவலுடன் எதிர்பார்த்த தளபதியின் பேச்சு.! பிகில் இசை வெளியீட்டில் விஜய் சொன்ன பிலாசபி.!

0
3276
bigil
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சில வாரங்களாகவே சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது. . அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த இசை வெளியிட்டு விழாவில் படக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக பேசி வருகின்றனர்.

- Advertisement -

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் மேடையில் தளபதி விஜய் என்ன பேசப் போகிறார்? என்ற கேள்வி மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்னால் வெளிவந்த புலி, சர்க்கார்,கத்தி ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் புதிய எண்ணத்தையும் தோற்றுவிக்கும் வகையிலும் , பல அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி வேலையை குறித்தும் , அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் விஜய் மேடையில் தோன்றி பேசிய போது, வெறித்தனம் பாடலுடன் துவங்கிய விஜய், பாடல் எப்படி உருவானது என்று மிகவும் காமெடியனாக விளக்கினார். மேலும், எப்போதும் இசை வெளியீட்டு விழாவில் பிலாசபி பேசும் இந்த விழாவில் ‘வாழ்கை என்பது ஒரு கால்பந்து ஆட்டம் போல தான், மற்றவர்களை இருக்க நினைக்காதீகர்கள். நீங்கள் தனித்துவமா இருங்க’ என்றதும் அரங்கமே அதிர்ந்து போனது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து பேசிய விஜய், இந்த படத்தில் பணிபுரிந்த அணைத்து சக நடிகர்களின் பெயரையும் வாசித்தார். மேலும், பிகில் படத்தின் இடைவேளைகளில் பட குழுவினருடன் சிறு சிறு விளையாட்டுகளை விளையாடியதாகவும் கூறினார். அதே போல வெறிதனம் பாடலை முதலில் சாம்பிளாக பாடி ரஹ்மானுக்கு அனுப்பியதாகவும், அட்லீ தான் தனக்கு போன் செய்து ரஹ்மான் சார், பாடலை ஓகே சொல்லிட்டார் என்றும் கூறினார்.

Advertisement