துள்ளாத மனமும் துள்ளும் பாடலை மேடையில் பாடிய விஜய் – அறிய வீடியோ இதோ.

0
353
Vijay

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய படம் என்றாலே போதும் திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது தமிழ் சினிமா உலகில் பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்திருக்கும் படங்களில் இவருடைய படங்களும் அதிகம். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த பாடகரும் ஆவார். பெரும்பாலும் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு பாடலை பாடி விடுவார். மேலும், சினிமா உலகில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இவர் தன்னுடைய படங்களில் பாடி கொண்டு வருகிறார்.

View this post on Instagram

thalapathyvijay 💓💓 #loves_for_evers

A post shared by TAMIL LOVERS ! (@loves_for_evers) on

இந்நிலையில் விழா ஒன்றில் இவர் பாடிய பாடல் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் அவர்கள் மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடலை பாடியுள்ளார். இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் தான் ‘மேகமாய் வந்து போகிறேன்’. இந்த பாடலை இந்த படத்தில் ராஜேஷ் என்பவர் பாடினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் அவர்கள் இந்த பாடலை பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வீடியோவை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை புரிந்தது.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்திற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
Advertisement