விஜய்க்கு சிலை வைக்க நினைத்து இலங்கையில் விஜய் ரசிகர்கள் வைத்திருக்கும் சிலை சமூக வலைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகி இருந்தது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றிருந்தது.
விஜய் ரசிகர்கள்:
இதற்கு காரணம், இவரின் ரசிகர்கள் தான். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம், சிலை போன்றவற்றை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். அதோடு அரசியலிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இலங்கையில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் சிலை வைக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அந்த சிலை இயக்குனர் பா ரஞ்சித்தின் சிலையாக மாறி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார வெட்சி படம் எடுத்துருந்தாலும் பா.ரஞ்சித் துக்கு சிலை வைக்கிற நல்ல எண்ணம் விஜய் ரசிகர்களுக்குதான் உண்டு… 😍😍#Jailer pic.twitter.com/jUwhHcan7f
— Spicy Chilli (@spicychilli4u) March 20, 2023
கிண்டலுக்குள்ளான விஜய் சிலை:
தற்போது அந்த சிலையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த தோழர் பா.ரஞ்சித், இதை எனக்கு சிலை வைத்த விஜய் ரசிகர்களுக்காக நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். விரைவில் விஜய்க்கு ஒரு படம் எடுத்து உங்களை குஷிப்படுத்துவேன் என்று பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த சிலையின் புகைப்படத்தை பார்த்து பலருமே, இது இயக்குனர் ரஞ்சித் மாறி தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால், சிலர் இந்த படத்தை பார்த்து அகத்திய முனிவர், நடிகர் விக்ராந்த், வானத்தைப்போல சீரியலில் இருக்கும் ராஜபாண்டி போல் இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.