விஜய்யின் கடைசி படம், ரசிகர்கள் கலங்கும் வகையில் 5 நிமிட ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு அறிவித்த படக் குழு.

0
274
- Advertisement -

விஜயின் ‘தளபதி 69’ படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது விஜயின் அடுத்த படமான ‘தளபதி 69’ படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தற்போது முதல் முறையாக இவர் விஜயுடன் கூட்டணி வைக்க இருக்கிறார். மேலும், இது தான் விஜயின் உடைய கடைசி படம். காரணம், இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தாலும் இன்னொரு பக்கம் உற்சாகத்தை அளித்து இருக்கிறது.

- Advertisement -

தளபதி 69 படம்:

பின் சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வினோத், தளபதி 69 படத்தில் நாங்கள் கமிட்டான உடனே விஜய் சார் முதலில் சொன்னது, இந்த படம் அனைத்து வயதினரும் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும். எல்லோருமே என்னுடைய படத்தை பார்ப்பார்கள். இந்த படத்தை அரசியல் தலைவர்கள் கூட பார்ப்பார்கள். இதனால் எந்த ஒரு அரசியல் தலைவரையும், கட்சியையும் தாக்கி இருக்கக்கூடாது. கொஞ்சம் அரசியல் காண்பித்து, முழுக்க முழுக்க கமர்சியலாக இந்த படம் நிறைந்திருக்கும்.

விஜய் சம்பளம்:

கண்டிப்பாக இது 200% விஜய் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதோடு இந்த படத்தில் சமந்தா, மம்தா பைஜி ஆகியோர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கு முன் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது தளபதி 69 படத்திற்கு 275 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயின் சம்பளமே இவ்வளவு என்றால் படத்தினுடைய பட்ஜெட் எப்படியும் 450 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதோடு இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

-விளம்பரம்-

படம் குறித்த அப்டேட்:

இந்த படம் கண்டிப்பாக விஜயின் உடைய அரசியல் பயணத்திற்கு ஒரு அடித்தளமாக இருக்கும். மேலும் ,
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களிலேயே இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.

படத்தின் அறிவிப்பு :

அதிலும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் தளபதி 69 படத்தின் அறிவிப்பை வித்யாசமாக ஒரு 5 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யின் சில விடீயோக்கள் அடங்கி இருக்கிறது. மேலும், 30ஆண்டுகள் மக்களை மகிழ்வித்த தளபதிக்கு நன்றி தெரிவித்து இருக்கின்றனர். இந்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

Advertisement