தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு விஜய் அறிக்கை

0
142
- Advertisement -

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். அதோடு தன் கட்சியின் நிர்வாகிகளும், ரசிகர்களும் பல திட்டங்களை போட்டு இருந்தார்கள். விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் பிறந்தநாள்:

அந்த வகையில் பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய ஐந்து படங்கள் தான் வெளியாகி இருக்கிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,

விஜய் அறிக்கை:

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதல்- மந்திரி என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

-விளம்பரம்-

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் மதிப்பிற்குரிய ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன்.

நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement