எழுந்து நின்ற தாய் தந்தை, விஜய் செய்த செயல் – இவரையா பெற்றோரை மதிக்காத பிள்ளைன்னு சொல்றாங்க?

0
477
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிவிக்கும் விழாவிற்கு விஜய் அம்மா, அப்பா வந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் கட்சி கொடி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார் என்று கூறப்பட்டது. அதோடு பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பேர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற போலீசாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால், விஜய், தன் கட்சி அலுவலகத்தில் 250- 300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்ற முடிவு செய்து இருந்தார்.

கட்சி கொடி அறிவித்தல்:

பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றியிருக்கிறார். கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பின் மேடையில் விஜய், இதை நான் கட்சிக்கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான கொடியாகவும் பார்க்கிறேன்.

-விளம்பரம்-

விஜய் செய்த செயல்:

நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் விஜயின் கட்சி கொடி அறிவிக்கும் விழாவிற்கு அவருடைய அப்பா, அம்மா வந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கட்சி கொடி அறிவிக்கும் விழாவிற்கு விஜயின் உடைய தாய் சோபா, தந்தை சந்திரசேகர் வந்திருக்கிறார்கள். அவர்களை மரியாதையுடன் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று இருந்தார். விழாவிற்கு விஜய் வந்தவுடன் எல்லோருமே எழுந்து நின்று இருந்தார்கள். உடனே விஜய், தன் அம்மா, அம்மாவை பார்த்து உட்காருங்கள் என்று சொல்லி அவர்களை உட்கார வைத்த பிறகு தான் விஜய் அமர்ந்திருக்கிறார்.

மேடையில் விஜய் சொன்னது:

பிறகு மேடையில் விஜய், கட்சியை குறித்தும், கொடியை குறித்தும் பேசி முடித்து விட்டு, விழாவிற்கு வந்த தன்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றியை தெரிவித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. இதனால் இருவருமே பேசவில்லை, தனித்தனியாக இருக்கிறார்கள் என்று பல சர்ச்சைகள் வந்திருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

Advertisement