Home பொழுதுபோக்கு சமீபத்திய

விஜய் முதல் நயன் வரை – பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் நடிகைகள்.

0
639
ponniyin
-விளம்பரம்-

மணிரத்தினம் முதலில் முயற்சி செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகர்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

-விளம்பரம்-

இது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட வருட கனவுப்படம். அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

படத்தின் நடிகர்கள் கதாபாத்திரம்:

-விளம்பரம்-

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

டீசர் வெளியீட்டு விழா:

படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். விழாவில் நடிகர்கள் பலரும் இந்த படத்தில் தங்களின் அனுபவங்கள் குறித்து கூறி இருந்தார்கள். மேலும், ரசிகர்களை பிரமிக்க வைத்த டீசர் தற்போது இந்தியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதோடு பலரும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக முயற்சி செய்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த வகையில் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்தினம் எம்ஜிஆர் எங்களுக்காக இதை விட்டுவைத்து சென்றார் என்றெல்லாம் பேசி இருந்தார்.

முதலில் படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள்:

இயக்குனர் மணிரத்தினமே இந்த படத்தை எடுக்க இரண்டு முறை முயற்சி செய்திருந்தார். பின் மூன்றாவது முறை தான் வெற்றி பெற்றார். அப்படி அவர் முதன்முதலில் எடுக்க முயற்சி செய்த இந்த படம் சில காரணங்களால் நின்று போனது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்த நட்சத்திரங்கள் பட்டியலில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய், மகேஷ்பாபு, சூர்யா, விக்ரம், விஷால், அனுஷ்கா, அசின், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news