ரசிகர்களை காண வேன் மீது ஏறிய விஜய். கூலிங் கிளாஸை மாட்டி, கெத்தாக எடுத்த செல்ஃபீ. தெளிவான வீடியோ இதோ.

0
14661
vijay-master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : தாய் தந்தையரின் 25வது திருமண நாளுக்கு புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த கயல் ஆனந்தி..

இந்த பிரச்சினை ஒரு வழியாக சுமுகமாக முடிவடைந்தது. இதனால் நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு தளபதிற்கு விஜய் மீண்டும் சென்றார். ஆனால், பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று போராட்டம் செய்துவந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தற்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

-விளம்பரம்-

இதற்கு முன்பாக நெய்வேலியில் மாஸ்டர் பட பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது என்று பலரும் அறியாமல் இருந்தனர். ஆனால், பா ஜ கவை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்திய பின்னர் படப்பிடிப்பு தலத்தில் ஏராளமான ரசிகர்கள் தினமும் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க வேன் மீது ஏறிய விஜய் கூலிங் கிளாஸை போட்டுகொண்டு பின்னர் ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement