தாய் தந்தையரின் 25வது திருமண நாளுக்கு புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த கயல் ஆனந்தி..

0
21471
kayal-anandhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என்று அழைத்தார்கள். இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் நடிகை ஆனந்தி நடிப்பில் வெளிவந்த படம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கினார். அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகை ஆனந்தி அவர்கள் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய தாய், தந்தையரின் புகைப் படத்தை பதிவிட்டு 25 ஆவது திருமண நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் தான் கயல் ஆனந்தி பெற்றோர்களா!! என்று கூறி வருகிறார்கள். தற்போது நடிகை ஆனந்தி அவர்கள் “அலாவுதீனின் அற்புத கேமரா” என்று புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார் . ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. இதனை தொடர்ந்து நடிகை ஆனந்தி எங்கே அந்த வான், ஏஞ்சல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு முதன் முறையாக ஏஞ்சல் படத்தில் ஆனந்தி பேய் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகை ஆனந்தி ஒரு புதுப் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, திரிஷா போலவே நடிகை ஆனந்தியும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு கமலி என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்த படம் தமிழகத்தில் நடக்கும் சாதிக் கொடுமைகளைப் பற்றி தெளிவாக பேசி உள்ள கதை. இப்படி இந்த வருடம் மட்டும் நடிகை ஆனந்தி கைவசம் 4,5 படங்கள் உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement