திரிஷாவுடன் டேட்டிங் சென்றாரா விஜய் ? நடந்த சம்பவம் இதுதானாம். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.

0
2366
Vijay
- Advertisement -

திரிஷாவுடன் விஜய் டேட்டிங் சென்றதாக பரவிய வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாரிசு. குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் இந்த படம் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல் வெளியாகி இருந்தது.

வெளிநாட்டில் விஜய்-திரிஷா:

இந்நிலையில் லியோ படம் குறித்த அப்டேட் தான் தற்போது சோசியல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, திரிஷா-விஜய் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக நார்வே சென்று இருக்கிறார்கள். அங்கு எடுத்த புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் வெளிநாட்டில் இருவரும் ஷாப்பிங் செல்வது போல் இருக்கிறது. இதை பார்த்தநெட்டிசன்கள் சிலர் இருவரும் டேட்டிங் சென்று இருப்பதாக வதந்திகளை பரப்ப துவங்கிவிட்டனர். ஆனால், இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை.

-விளம்பரம்-

வதந்திக்கு முற்றுப்புள்ளி :

இந்த நிலையில் இந்த புகைப்படம் லியோ படத்தின் படப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.மேலும், புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சமூக வலைதள கணக்கிடம், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ காப்பி ரைட்ஸ் உரிமை கோரியுள்ளது. இதன் மூலம் திரிஷாவுடன் விஜய் டேட்டிங் சென்றதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் – கீர்த்தி வதந்தி :

ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷை முடிச்சி போட்டு அடிக்கடி சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கள் பரவி வந்தது. மேலும், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நெருங்கி பழகி வருவதாகவும் இதனால் விஜய் மனைவி சங்கீதா விஜய்யை பிரிந்து சென்று விட்டதாக கூட ஹேட்டர்ஸ்கள் வதந்திகளை பரப்பி இருந்தனர். ஆனால், அந்த தகவலும் துளியும் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement