‘ஆமா நீ அவன கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு’ – சாந்தனு பெயரை சொல்லி லோகேஷை கலாய்த்துள்ள விஜய்

0
1581
Vijay
- Advertisement -

நீ சாந்தனுவை கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு அவன் வருவானா என்று லோகேஷை விஜய் கலாய்த்துருக்கம் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்யராஜ்-பூர்ணிமா ஆகியோரின் மகன் ஆவார். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” நடிப்பில் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் சாந்தனு பிரபலமானார். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரால் தன் தந்தையை போல் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. பின் நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதற்குப்பின் இவர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், ஊர்வசி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இராவணக் கோட்டம்.

இந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கியிருக்கிறார். மதயானை கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ராவண கோட்டம். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சாந்தனு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னை ஒரு வாரத்திற்கு முன்பு லோகேஷ் அவருடைய வீட்டிற்கு நைட் டின்னருக்கு வர சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

படம் ரிலீஸ் பிரஷரில் என்னால் போக முடியவில்லை. ரிலீசுக்கு பின் வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் நான் நான்கு நாட்களுக்கு முன் லியோ படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் அண்ணாவை சந்திக்கப் போனேன். அப்போ விஜய் இடம் லோகேஷ், அண்ணா ஓவரா பண்றான் இவன். வீட்டுக்கு கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொல்றான் என்று கூறினார். அதற்கு விஜய், ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு வீட்டுக்கு வேற வரணுமா என கேட்டார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் விஜய் இப்படி சொன்னதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் லோகேஷ் சாந்தனுவை வைத்து முப்பது நாட்கள் சூட்டிங் எடுத்தார். ஆனால், படத்தில் அவரை 12 நிமிஷம் தான் காண்பித்து இருக்கிறார். இது ஏன் என்று தெரியவில்லை.. எதற்கு என்னை 30 நாள் சூட்டிங் எடுக்கணும். விஜய் அண்ணாவுடன் இருந்த சண்டை போன்ற பல காட்சிகள் வரவில்லை என்று சாந்தனு கூறியிருந்தார். இந்த சம்பவத்தை வைத்து தான் விஜய் லோகேஷை கலாய்த்து இருக்கலாம் என்று நெட்டிசங்கள் கூறி வருகின்றனர்

Advertisement