விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கிறது. அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், ஈரமான ரோஜாவே 2, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற பல தொடர்கள் விறுவிறுப்பாகவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் சம்பளம் விவரம் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுஜிதா தனுஷ்:
இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின்னர் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
சுசித்ரா:
இவர் கன்னட நடிகை ஆவார். இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் அனைத்து குடும்ப பெண்களுக்குமே ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. இந்த சீரியலின் மூலம் தான் இவர் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்த சீரியலில் இவர் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
வினுஷா தேவி:
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு இடத்தைப் பிடித்தவர் வினுஷா தேவி. இவர் முதல் பாகத்திலும் கண்ணமாவாக நடித்தார். தற்போது இரண்டாம் பாகத்திலும் கண்ணமாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 8000 சம்பளம் வாங்குகிறார்.
நக்ஷத்திரா:
விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நக்ஷத்திரா. பின் இவர் சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார். இவர் வெள்ளித்திரை படங்களில் மட்டும் இல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. தற்போது இவர் தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார். இந்த சீரியலில் இவர் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி:
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரேஷ்மா. இதனை அடுத்து இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். சன் டிவி சீரியலில் எல்லாம் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாக்கியலட்சுமி ராதிகா கதாபாத்திரம் தான். பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு நாளைக்கு 7000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.