கொரோனா பிரச்சனை காரணமாக விஜய் டிவியின் அனைத்து சீரியல்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஹாட் ஸ்டாரிலும் அதே தான்.

0
2868
vijaytv
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
Download Bhagyalakshmi Episode 1.3gp .mp4 | Codedfilm

சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : இந்த மாதிரி ட்ரெஸ்ஸ போட்டு முதல்ல உங்க பசங்ககிட்ட காட்டுங்க – அட்வைஸ் செய்த ரசிகருக்கு ரேஷ்மா கொடுத்த பதில்.

- Advertisement -

இருப்பினும் சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும் பல சீரியல்கள் இந்த லாக் டவுன் சமயத்தில் நிறுத்தப்பட்டது. அதே போல தான் விஜய் டிவியின் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. இந்த லாக் டவுன் சமயத்தில் விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களை இணைந்து சங்கமம் என்ற பெயரில் உருட்டி வந்தனர். இப்படி ஒரு நிலையில் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.

அது என்னவெனில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய அணைத்து சீரியல்களுக்கும் டைட்டில் பாடல்கள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டு ரன்னிங் டைமை முட்டு கொடுத்து வருகின்றனர், மேலும், ஒரு சில சீரியல்களுக்கு 4 விளம்பர பிரேக் கூட விடுகின்றனர். விஜய் டிவி சீரியல்களை தற்போது ஹாட் ஸ்டாரில் பார்த்தால் கூட வெறும் 20 நிமிடங்கள் மட்டும் தான் ஓடுகிறது.

-விளம்பரம்-
Advertisement