இந்த மாதிரி ட்ரெஸ்ஸ போட்டு முதல்ல உங்க பசங்ககிட்ட காட்டுங்க – அட்வைஸ் செய்த ரசிகருக்கு ரேஷ்மா கொடுத்த பதில்.

0
1593
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதுவும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பானஇந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பெரும் வெற்றியடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கு பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரேஷ்மாவும் ஒருவர். “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

-விளம்பரம்-

நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இதையும் பாருங்க : செஞ்ச ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் வீன் – இதுவரை இல்லாத அளவு படு குண்டாக மாறியுள்ள அனுஷ்கா.

- Advertisement -

மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான உடையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், இதுபோன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்வதற்கு முன்பாக அதனை உங்கள் குழந்தைகளிடம் காட்டுங்கள் அப்படி உங்களால் காட்ட முடிந்தால் பின்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள் கொஞ்சமாவது ஒரு பொறுப்புள்ள அம்மாவாக நடந்துகொள்ளுங்கள்.

-விளம்பரம்-

எதற்காக இப்படியெல்லாம் புகைப்படம் போடுகிறீர்கள் பாலோவர்களை ஈர்க்கவும், சம்பாதிக்கவும், ப்ரமோஷன் செய்யவுமா. ஒழுங்கான கண்டட் போட்டால் தன்னால் பாலோவர்கள் வருவார்கள் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ரேஷ்மா, இதை ஏன் நீங்கள் உங்களின் போலியான கணக்கிலிருந்து சொல்லுகிறீர்கள். ஏன் உங்கள் உண்மையான முகத்தை காட்ட மறுக்கிறார்கள். யாருக்கும் நீங்கள் யார் என்று தெரிய கூடாது என்பதற்காகவா. மேலும், நான் எதையும் மறைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நான் நானாக இருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து போய் விடுங்கள்.

Advertisement