ஆல்யா முதல் காவ்யா, தர்ஷா வரை – Promotion பெயரில் பல லட்ச ரூபாயை ஏமாற்றிய விஜய் டிவி நடிகைகள். ஆதாரத்தை வெளியிட்ட நபர்.

0
1685
alya

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் தர்ஷா குப்தாவை திட்டி தீர்த்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தர்ஷா குப்தா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சினிமா நடிகைகளை விட சின்னத் திரை நடிகைகள் தான் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

ஒரு போஸ்டுக்கு இவ்வளவு ஒரு ஸ்டோரி இவ்வளவு இன்ஸ்டாவில் அந்த பொருட்கள் குறித்து வீடியோ போட இவ்வளவு என்று கணக்கிட்டு சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பெறுகின்றனர். எந்த அளவிற்கும் போலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ப்ரோமோஷனுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தான் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக கூறி இலவசமாக பொருட்களை வாங்கிவிட்டும் பல ஆயிரம் பணத்தை பெற்றுவிட்டும் அதற்கான போஸ்டை போடாமல் தர்ஷா ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட தர்ஷா, நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை, எனனிடம் சிலர் தங்களுடைய புடவை, கம்மல் போன்றவற்றை விளம்பரம் செய்ய சொல்லி கேட்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் ப்ரோமோஷன் வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன். அதனால் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன். உண்மை தெரியாமல் யாரை அசிங்கமாக பேச வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தர்ஷா குத்பா உட்பட விஜய் டிவி சீரியல் நடிகைகளான பவித்ரா, காவ்யா, சான்ட்ரா, ஆல்யா மானஸா என்று பல பிரபலமான நடிகைகள் சிறு தொழில் முனைவோரிடம் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக பணத்தை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பொருட்கள் குறித்து ப்ரொமோஷன் செய்யாமல் இருந்துள்ளனர். அப்படி மீறி கேட்கும் சிறு தொழில் செய்பர்களிடம் அவர்கள் அலட்சியமாக பேசியுள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், உங்கள் பொருட்களை விளம்பரம் செய்ய முடியாது என்றும் ஒரு சிலர் திமிராக பேசியுள்ளனர். இதுகுறித்து சில ஆதாரங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஜேசன் சாமுவேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களில் செலிபரிட்டிகளுக்கு சம்பந்தப்பட்ட பிராண்டில் இருந்து அனுப்பிய மெசேஜ், விளம்பரம் செய்து தருவதற்காக அவர்கள் பெற்ற தொகையின் இன்வாய்ஸ் எல்லாவற்றையும் ஸ்கிரீன் ஷாட்களுடன் பதிவிட்டு வருகிறார்

இதுகுறித்து கூறியுள்ள அவர், , `இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளுயென்சர்களாக இருக்கும் பல செலிபரிட்டிகளிடம் எங்களுடைய பிராண்டை புரொமோட் செய்து தருமாறு கேட்டோம். அதற்குரிய பணத்தையும் பொருளையும் கொடுத்தோம். ஆனால், பொருள்களை வாங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அந்தப் பொருளை விளம்பரம் செய்யவில்லை. மெசேஜ்களைப் படித்துவிட்டு பதிலும் தரவில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது என்று என்னிடம் ஆலோசனைகள் கேட்டார்கள். 

, `இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளுயென்சர்களாக இருக்கும் பல செலிபரிட்டிகளிடம் எங்களுடைய பிராண்டை புரொமோட் செய்து தருமாறு கேட்டோம். அதற்குரிய பணத்தையும் பொருளையும் கொடுத்தோம். ஆனால், பொருள்களை வாங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அந்தப் பொருளை விளம்பரம் செய்யவில்லை. மெசேஜ்களைப் படித்துவிட்டு பதிலும் தரவில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது என்று என்னிடம் ஆலோசனைகள் கேட்டார்கள். பொருளுக்கு எப்போது புரொமோஷன் பண்ணுவீங்க என்று கேட்டால்கூட , ` சீக்கிரம்; என்று சொல்லி மாதக்கணக்கில் இழுத்தடித்திருக்கிறார்கள். சில செலிபிரிட்டிகள் ரிப்ளை கூட செய்வது இல்லை. அதற்கான எல்லா ஆதாரங்களையும் சேர்த்து தான் நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கேன்.

அந்த வீடியோவை கான இங்கே கிளிக் செய்யவும் https://www.instagram.com/tv/CNF3FZ4Fq9h/?utm_source=ig_embed

 சில செலிபிரிட்டிகள் பிராண்டுகளுக்கு பணத்தைத் திருப்பித் தர ஆரம்பித்திருக் கிறார்கள். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement