இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது-குழந்தையின் குயூட் புகைப்படத்தை பதிவிட்ட அமித்.

0
89750
amit bhargav
- Advertisement -

பெரும்பாலும் வெள்ளி திரை நடிகர்களுக்கு சமமாக சின்னத் திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு டிவி தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், சீரியலில் கிடைக்கும் பிரபலத்தை வைத்து இவர்களுக்கு சினிமாத் துறையில் படங்களில் நடிக்க சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்,பிரியா பவானி சங்கர் என்று சொல்லி கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகர்கள் சென்று உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களின் மூலம் பிரபலமானவர் அமீத் பார்கவ். மேலும், நடிகர் அமீத் பார்கவ் சில ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் சின்ன திரைக்கு அறிமுகம் ஆனவர். பின்னர் அதே தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற தொடரிலும் நடித்தார். இப்படி சீரியலின் மூலம் கிடைத்த வரவேற்பினால் இவருக்கு சினிமாவில் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தன.

- Advertisement -

மேலும்,நடிகர் அமீத் பார்கவ் அவர்கள் “என்னை அறிந்தால், குற்றம் 23,மிருதன்” போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து உள்ளார். நடிகர் அமீத் அவர்கள் ரேடியோ jockey மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல குறும்படங்கள் கூட நடித்து இயக்கிய உள்ளார்கள். சமீபத்தில் தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை கூட பிறந்து இருந்தது. மேலும், தங்களது குழந்தையின் புகைப்படத்தை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அமித் தனது குழந்தை தன்னுடைய சட்டை பிஞ்சிக் கைகளால் பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, என்னுடைய குழந்தையின் அருகில் நான் இருந்தால் இப்படித்தான் அவள் தூங்குவாள் அதுவும் நான் காலையில் வேலைக்கு கிளம்பும் போது எப்படி பிடித்துக் கொள்வாள். இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது. #paasakariponnu #VedaSriBhargav” என பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement