கண்ணாடி இல்லாமல் கிளாஸ் போட்டு மாஸ் காட்டிய டிடி. வைரலாகும் கியூட் வீடியோ.

0
4686
dd
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடு இல்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13387 ஆகவும், 437 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவால் சினிமா பிரபலங்கள் எல்லாம் வீட்டில் இருப்பதால் பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்கள் அழகான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். எப்போதுமே டிடி அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

- Advertisement -

பல போட்டோ சூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். டிடி கலகலப்பாக அங்கும் இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே பல போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் வீட்டில் இருந்த படி குட்டையான கவர்ச்சியான உடை அணிந்த படி புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதற்கு பலர் ஆதரவையும் விமர்சனத்தையும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் தற்போது டிடி அவர்கள் ஒரு அழகான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான Monety hiest என்ற வெப் தொடரில் இடம் பெற்ற ஸ்பானிஷ் பாடலை பாடியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் டிடி அவர்கள் கண்ணாடியே இல்லாமல் ஒரு கிளாஸ் போட்டு இருக்கிறார். அதை பார்க்க செம்ம மாஸாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலர் இன்ஸ்டாகிராமில் டிடி இடம் கேள்வி கேட்டுள்ளார்கள். அதில் ஒரு சில பேர் கண்ணாடி இல்லனா ஸ்பானிஷ் காரன் நம்மள பத்தி என்ன நினைப்பா டிடி என்று கேட்டுள்ளார்.

அதற்கு டிடியும் ‘மன்னிச்சுசுஉ’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். இப்படி பல பேர் டிடியின் கண்ணாடி குறித்து கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள். தொகுப்பாளினி டிடியின் இந்த அசத்தல் வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்துள்ளனர். தற்போது சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் ரசிகர்களுக்கு எப்போதுமே பேவரைட் ‘டிடி’ தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார் டிடி. இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். தற்போது டிடி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் speed get set go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement