பொது நிகழ்ச்சியில் பிரியங்காவை கேவலப்படுத்திய மா.கா.பா ஆனந்த்.! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்

0
502
priyanka-Anchor

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆபாச வசனங்களும், பெண்களை இழிவு படுத்தும் செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமே ஓரளவிற்கு குடும்பங்கள் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது.

priyanka

ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ‘சூப்பர் சிங்கர் ‘ நிகழ்ச்சியில்,கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நிஷா, தீனா, பழனி ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் போட்டியாளரான செந்திலுடன் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சில பெண்களை அழைத்து நடனமாட செய்தார். அவர்கள் நடனமாடி முடித்தவுடன் செந்திலின் மனைவி ராஜலக்ஷ்மி ‘நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா ‘என்று பிரியங்காவை கிண்டல் செய்துள்ளார்.

priyanka

இதன் பின்பு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தீனா 500 ரூபாயை எடுத்து சென்று ப்ரியங்காவிடம் கொடுத்து ‘எனக்கும் இது போன்று யாரையாவது பெண்ணை செட் செய்து விடுங்கள்’என்று கூறுகிறார். அதற்கு அனைவரும் சிரிக்க பின்னர் உன்னி கிருஷ்ணனும், மா க பா வும் ப்ரியங்காவிற்கு 500 ரூபாயை கொடுக்கின்றனர்.

பல கோடி நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சில் ஒரு பெண்ணிற்கு பணம் கொடுத்து தங்களுக்கு பெண்ணை செட் செய்து தரும்படி அனைவரும் கூறியுள்ளது வேடிக்கையான விடயமாக தெரியவில்லை. விஜய் டிவியில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு கூட ‘பீப்’ தேவைப்படும் என்றால் அது விஜய் டிவிக்கு மட்டும் தான்.