விஜய் டிவி ப்ரியங்காவிற்கு இன்று முக்கியமான நாளாம்.! புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்.!

0
23104
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். சமீபத்தில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த ஸ்டைல் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்குபெற்றுவந்தார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர். 

- Advertisement -

பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்க்கு பின்னரும் பிரியங்கா தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் பிரவீன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக ப்ரியங்கா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement