பாண்டியன் ஸ்டோர்ஸ் உட்பட்ட புதிய எபிசோடுகள் எப்போது- விஜய் டிவி விளக்கம்.

0
3696
pandian stores
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் புதிய எபிசோடுகள் குறித்து தற்போது விஜய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொலைக்காட்சியில் சீரியல்களின் பழைய எபிசோடுகளையே ஒளிபரப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், தொலைக்காட்சி நிறுவனங்கள் சமீபத்தில் தான் தமிழக அரசிடம் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி வாங்கினர். தமிழக அரசும் சில நிபந்தனைகளுடன் தான் சீரியல் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தது. தற்போது சீரியல் எடுப்பதற்கான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம் ஆன விஜய் தொலைக்காட்சி அடுத்த வாரம் முதல் சீரியல்களின் புதிய எபிசோட்கள் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

இதையும் பாருங்க : ஆரம்பத்தில் விஜய்யுடன் ஸ்கூட்டரில் சென்ற எஸ் ஏ சி – அம்பாசிடர் காரை கொடுத்த பிரபல நடிகர்.

- Advertisement -

இது குறித்து விஜய் நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது, அடுத்த வாரம் முதல் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘காற்றின் மொழி’, ‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘தேன்மொழி’ ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 8-ம் தேதி முதல் விஜய் டிவியில் ‘செந்தூரப் பூவே’ என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இது காதல் நிறைந்த குடும்ப சீரியல். நடுத்தர வயது (45) மனைவியை இழந்த துரைசிங்கத்தைப் பற்றிய கதை. இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். அவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை.

-விளம்பரம்-

சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவைத் திருமணம் செய்ய நேர்கிறது. ரோஜா, துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர் ஆவர். ரோஜா – துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது இந்த ‘செந்தூரப் பூவே’ மெகா சீரியல்.

Advertisement