அவமானங்கள் பெற்று தந்த வெகுமதி – புதிய வீட்டில் பால் காச்சிய அறந்தாங்கி நிஷா.

0
1183
nisha
- Advertisement -

பெண்களால் காமெடியில் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியவர் நிஷா. இவருடைய நகைச்சுவைப் பேச்சும், பாடி லேங்குவேஜும் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பின் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நிஷா கலந்து கொண்டிருந்தார். இவரை மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும், அசிங்கப்படுத்தினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்.

-விளம்பரம்-

இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்பிஏ படித்து முடித்துள்ளார். அழகாய் இருக்கிறவர்கள் ஜெயிச்சதைவிட வாழ்க்கையில் அசிங்கம், அவமானம் பட்டவர்கள் தான் ஜெயித்தது அதிகம் என்பதை நிரூபித்து காண்பித்தவர். நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மீடியா துறைக்கு வருவதற்கு முன் இவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக 13 ஆண்டுகள் இருந்து உள்ளார்.

- Advertisement -

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷா போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்களால் சில சர்ச்சைகள் அவமானங்கள் வந்தது. இருந்தாலும் அதை எல்லாம் உடைத்தெறிந்து போராடி வருகிறார் நிஷா. பின் இவர் கருப்பு ரோஜா என்று ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பல வகையான காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரின் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சேனலின் மூலம் நிஷா மீது இருந்த நெகடிவ் விமர்சனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.

வழக்கம்போல் நிஷா விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டார். இப்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிஷா அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு தன் கணவருக்கு பிள்ளைகளுடன் குடி வந்துள்ளார். சென்னையில் நிஷா புது வீட்டில் வாடகைக்கு வந்துள்ளார். அதை தன்னுடைய கருப்பு ரோஜா சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். வழக்கம்போல் நக்கல், நையாண்டி நிறைந்த பேச்சில் அந்த வீடியோவில் நிஷா பேசியுள்ளார். மேலும், இந்த வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement