விஜய் அவார்ட்ஸ் 2018 தொகுத்து வழங்கப்போவது இவர்களா? யார் தெரியுமா

0
1159
vijay awards
- Advertisement -

விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் இன்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது. என்னதான் பல விருதுகள் பெற்றாலும் விஜய் அவ்ர்ட்ஸ் விழாவில் விருது பெறுவதை கலைஞர்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

தற்போது விஜய் டிவியில் இருந்து சினிமா துறைக்கு சென்ற சிவகார்த்திகேயனும் இந்த மேடையில் ஒரு காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தவர் தான். எனவே விஜய் டிவியை பொறுத்த வரை இந்த மேடை ஒரு மிக பெரிய கெளரவ பலமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள 10 ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த விழாவின் தொகுப்பாளர்களாக விஜய்டிவியில் பணிபுரிந்து வரும் நீயா நானா கோபிநாத், டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, மா க பா ஆனந்த் ஆகியோர் தொகுப்பாளராக அறிவிக்கப்ட்டுள்ளனர்.

Advertisement