விஜய் அவார்ட்ஸ் விழா ரத்து.! உருப்படியான விஷயத்தை செய்த விஜய் டிவி..! காரணம் இதோ.!

0
1855
vijayawards
- Advertisement -

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதுப்பொலிவுடன் சென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ 10-வது ஆண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

vijay-awards

- Advertisement -

சினிமா நட்சத்திரங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வந்தது விஜய் டிவி. பல்வேறு பிரச்னைகளால் கடந்த இரு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு நிகழ்ச்சியை மிகப் பிரமாதமாக நடத்த முடிவு செய்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (26.5.2018) மாலை நடப்பதாக இருந்தது. விழாவில் நடிகை காஜல் அகர்வால், அஞ்சலி ஆகியோரின் நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற இருந்தன. நடிகை ராதா, இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கே.எஸ்.

ரவிக்குமார், பாக்யராஜ், யூகி சேது ஆகியோர் விருதுத் தெரிவுக் குழுவின் நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் எல்லாம் கூட வழங்கப்பட்டு விட்ட நிலையில் திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

sterlite

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்கும் இந்த நேரத்தில் இத்தகையை ஒரு கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது சரியாக இருக்காது என்றே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ’வழங்கப்பட்ட டிக்கெட்டுகளைப் பத்திரமாக வைத்திருங்கள், மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement