உண்மைய சொல்லனும்னா- ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து சரண்யா வெளியிட்ட வீடியோ.

0
45067
saranya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியல் நிறைவடைந்தது குறித்து அந்த தொடரில் நடித்து வந்த சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலும் ஒன்று. கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சரண்யா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆயுத எழுத்து சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. அதற்கான காரணம் தெரிந்ததும் நானே அதை சொல்கறேன்.

View this post on Instagram

#VijayTelevision #VijayTv

A post shared by Vijay Television (@vijaytelevision) on

விரைவில் அடுத்து ஒரு நல்ல தொடரில் உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த சீரியல் துவங்கிய சில மாதங்களிலேயே பல பிரச்சனைகள்.ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும், ஆனந்த் என்பவரும் கமிட் ஆனார்கள்

-விளம்பரம்-
Advertisement