என்னது பாரதி கண்ணம்மா சீசன் 2ல இவங்க டபுள் Act ஆ – ஒன்னுக்கே தாங்காதே.

0
370
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கி கடந்த 3ஆம் தேதிதான் நிறைவடைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணம்மா கழுத்தில் தாலியை பாரதி காட்டுவார் அதோடு தொடரும் என முடிந்தது.

-விளம்பரம்-

மேலும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.ஜே.பாலாஜி, பிக் பாஸ் பிரபலம் ஷிவின் என பலரும் கலந்து கொண்டனர். சீரியலில் முடிவில் சுபம் என்று வருவதற்கு பதிலாக தொடரும் என வந்தது அடுத்து பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த 4 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ப்ரோமோவும் விஜய் தொலைக்காட்சியின் சோசியல் மீடியாக்களில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீசன் 2 :

இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2 சீசனில் பழைய பாரதிக்கு பதிலாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிப்பதாகவும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே தொடரப் போகிறார் கூறியுள்ளனர். இந்த ப்ரோமோ வைரலாகவே பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அதோடு பாரதி கண்ணம்மா சீசன் 2 (6ஆம் தேதி) இன்றில் இருந்து தொலைக்கட்சியில் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்த நிலையில் தான் பாரதிகண்ணம்மா 2வின் கதை பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைராலகி வருகிறது.

குடிபோதையில் பாரதி :

கடந்த ப்ரோமோவில் காட்டப்பட்டது போலவே கதாநாயகன் பாரதி பெரிய பணக்கார வீட்டு பிள்ளை. ஆனால் இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். இப்படியிருக்க பாரதியின் 25வது பிறந்தநாளை கொண்டாட ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை காண இவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்படி இருக்க பாரதி காலையிலேயே குடிபோதையில் ஊர்மக்களை கான வருகிறார். ஏற்கனவே பாரதியின் தந்தை மறைந்த நிலையில் பாரதியும் இப்படி இருப்பதை பார்த்து வருத்தமடைகிறார் பாரதியின் தாய்.

-விளம்பரம்-

மத்திய சிறையில் சித்ரா :

கதாநாயகன் பாரதி இப்படி இருக்க மறுபுறம் கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார். இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா. இவர் சிறையில் கஞ்சா விற்ற ஒருவரை காட்டி கொடுத்தின் மூலம் நல்ல குணத்திற்காக வெளியில் அனுப்புகின்றனர். ஆனால் மாட்டிக்கொண்ட அந்த பெண் சித்ராவை கொலை செய்ய வெளியில் அடியாட்களை தயாராக வைக்கிறார்.

இரண்டு கண்ணம்மா :

இப்படி மத்திய சிறையில் இருந்து வெளியில் வரும் சித்ரா ஒரு பேருந்தில் ஏறுகிறார். அங்கேதான் ஒரு பெரிய ட்விட்ஸ்ட் வருகிறது. அதாவது சித்ரா வந்து அமர்ந்த இடத்தில் கண்ணம்மா பக்கத்தில் சீட்டில் அமறுகிறார். இப்படி இருக்க ஒருவர்க்கொருவர் தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை பரிமாறிக்கொள்ளும் நிலையில் கஞ்சா விற்ற பெண்ணுடைய அடியாட்கள் கண்ணம்மாவை கொலை செய்து விடுகின்றனர். இதனால் சித்ரா கண்ணம்மாவாக மாறுகிறார். இப்படித்தான் பாரதி கண்ணம்மா சீசன் 2வின் கதை செல்ல இருக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

Advertisement