பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
முதல் ஏழு சீசன் களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
கமல் தனது இன்ஸ்டாகிராமில், தற்காலிகமாக இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது சீசனில் அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள். கடந்த எட்டாவது சீசனை பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 9:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடந்தது. கொரோனாவிற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி அப்டேட்:
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முன்கூட்டியே ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது செப்டம்பர் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் ஏழு சீசன்களாக கமலஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். கடந்த எட்டாவது சீசனை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது இந்த ஒன்பதாவது சீசனையுமே விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.






