அட கடவுளே, சின்னத்தம்பி சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகையா இது – இன்ஸ்டாகிராம் போஸை பாருங்க.

0
1499
pavani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் வெற்றிகரமான ஒரு சிரியலாக இருந்து வந்தது. பிரபல நடிகர் ப்ரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

- Advertisement -

இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் 442 எபிசோடுகளை கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த தொடருக்கு பின்னர் தற்போது பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ தொடரில் நடித்துவந்தார். ஆனால், அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார். தற்போது இவருக்கு பதிலாக டெப்ஜெனி மொடக் என்பவர் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை பவானி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement