குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில ரியாலிட்டி தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார்.
குக் வித் கோமாளி:
கடந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார்கள். சினிமா, சீரியலை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் விஜய் டிவியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவித்திருந்தார்கள். அதோட ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் வெளியேறிட்டார்கள். அதனால் தான் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
கடந்த சீசன் தான் பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியாக இருந்தது. காரணம், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மணிமேகலை -பிரியங்கா இடையே சலசலப்பு ஏற்பட்டு இருந்திருந்தது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை தொடங்கும் நிலையில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. அதன் பின் நிகழ்ச்சியை விட்டே மணிமேகலை வெளியேறி விட்டார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
குக் வித் கோமாளி 6:
அதே போல் டைட்டில் பட்டதை பிரியங்கா தான் பெற்றிருந்தார். இருந்தாலுமே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது. பின் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. பின் இந்த முறை சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் குக் வித் சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
குக் வித் கோமாளி 6 ப்ரோமோ:
அதில், கோமாளிகள் எல்லோருமே காமெடி, கலாட்டா என்று நடனம் ஆடுகிறார்கள். அப்போது ஒருவர், அதே ஐந்து சீசன், அதே கோமாளி, அதே காமெடி, அதே அரைத்த மாவை தான் அரைக்க போறீங்க என்று கேட்கிறார். உடனே கோமாளிகள், இப்போது இந்த முறை புதுசு, கொஞ்சம் பெருசா பண்ணுறோம் என்று சொல்கிறார்கள். தற்போது இந்த ப்ரோமோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.